மாமன்னர் பூலித்தேவன் காட்டிய வழியில்.. சசிகலா அறிக்கை

Pulithevan | மாமன்னர் பூலித்தேவனின் 309ஆவது ஜெயந்தியை முன்னிட்டு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published on: August 31, 2024 at 4:07 pm

Updated on: September 1, 2024 at 12:08 pm

Pulithevan Jayanthi | மாமன்னர் பூலித்தேவன் அவர்கள் காட்டிய அதே வழியில், ஜாதி, மத, பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரப்பாசத்தோடும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்திய சுதந்திரத்திற்காக முதன்முதலில் போராட்டதிற்கு வித்திட்ட மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 309-வது பிறந்தநாளினை கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெற்கட்டும் செவலை பூர்விகமாக கொண்ட பாளையக்காரரான மாமன்னர் பூலித்தேவன் அவர்கள், 1751ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர் என்ற பெருமைக்குரியவர்.
ஆங்கிலேயர்களுக்கு அனைத்து குறுநில மன்னர்களும் பயந்து வரி, கப்பம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், அசாத்திய துணிச்சலுடன் ஆங்கிலேயர்களுக்கு வரி, கப்பம் கொடுக்க மறுத்ததோடு, முதல் சுதந்திர போராட்டத்தை தொடங்கியவர் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

சிறுவயதிலேயே வீர உணர்ச்சியையும், கடவுள் பக்தியையும் கொண்ட மாமன்னர் பூலித்தேவன் அவர்கள் தனது நிர்வாக திறமையால் சிறப்பான ஆட்சியை நடத்தினார்கள்.
மேலும், பல்வேறு சமூக மக்களை ஒருங்கிணைத்து சமூக ஒற்றுமைக்கு வித்திட்டவர். ஒண்டிவீரன் பகடை மற்றும் வென்னிக்காலடி ஆகியோரை தனது தளபதிகளாக தனக்கு வலப்புறமும், இடதுபுறமும் வைத்து அழகுபார்த்தவர்.

மாமன்னர் பூலித்தேவன் அவர்கள் காட்டிய அதே வழியில், ஜாதி, மத, பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரப்பாசத்தோடும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 309-வது பிறந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க 

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com