செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் பி.பி.எஃப் (PPF) உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் பி.பி.எஃப் (PPF) உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.
Published on: August 31, 2024 at 2:17 pm
PPF New Rule | பி.பி.எஃப் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் தொடக்கமான அக்டோபர் 1, 2024 முதல் புதிய விதிகள் பொருந்துகின்றன.
அந்த வகையில், தேசிய சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்கு ஆகியவற்றில் முதலீட்டாளர்களுக்குப் பொருத்தமான ஆறு புதிய விதிமுறைகள் வெளியாகியுள்ளன.
இதில்,
ஒழுங்கற்ற தேசிய சேமிப்புத் திட்டம் (NSS) கணக்குகள்
பல பி.பி.எஃப் கணக்குகள்
வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) மூலம் PPF கணக்கை நீட்டித்தல்
பாதுகாவலர்களுக்குப் பதிலாக தாத்தா பாட்டிகளால் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி கணக்கு உள்ளிட்டவை வருகின்றன.
இதையும் படிங்க : மாதந்தோறும் ரூ.20,500 வட்டி வருவாய்: போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீம் தெரியுமா?
மைனர் பி.பி.எஃப் கணக்குகள்
தனிநபர் (சிறுவர்) கணக்கைத் தொடங்கத் தகுதி பெறும் வரை, அதாவது தனிநபர் 18 வயதை அடையும் வரை, அத்தகைய ஒழுங்கற்ற கணக்குகளுக்கு அஞ்சலக சேமிப்பு (POSA) வட்டி செலுத்தப்படும். அதன் பிறகு, பொருந்தக்கூடிய வட்டி விகிதம் வழங்கப்படும்.
அத்தகைய கணக்குகளுக்கான முதிர்வு காலம், மைனர் வயது முதிர்ந்த நாளிலிருந்து, அதாவது, தனிநபர் கணக்கைத் திறக்கத் தகுதி பெறும் தேதியிலிருந்து கணக்கிடப்படும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்
தாத்தா பாட்டிகளின் (சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லாத பிற) பாதுகாவலரின் கீழ் திறக்கப்பட்ட கணக்குகளின் விஷயத்தில், பாதுகாவலர் சட்டத்தின் கீழ் உரிமையுள்ள ஒருவருக்கு, அதாவது இயற்கையான பாதுகாவலர் (உயிருள்ள பெற்றோர்) அல்லது சட்டப் பாதுகாவலருக்கு மாற்றப்படும்.
சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம், 2019 இன் பாரா 3ஐ மீறி ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டால், முறையற்ற கணக்குகள் மூடப்படும்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com