இலவச வேட்டி, சேலையை ஏழை கைத்தறி நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
இலவச வேட்டி, சேலையை ஏழை கைத்தறி நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
Published on: August 30, 2024 at 1:33 pm
Updated on: August 30, 2024 at 2:50 pm
Dr Ramadoss | இலவச வேட்டி, சேலை விசைத்தறிகளிடம் மொத்தமாக வாங்கி ஏழை கைத்தறி நெசவாளர்களுக்கு துரோகம் இழைப்பதா? என மருத்துவர் ராமதாஸ் கேள்வியெழுப்பி உள்ளார்.
இது குறித்து மருத்துவர ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2025&ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி, சேலைகள் முழுவதையும் ஒட்டுமொத்தமாக விசைத்தறி நெசவாளர்களிடமிருந்து வாங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தின் நோக்கத்தை சிதைத்து கைத்தறியாளர்களுக்கு துரோகம் இழைப்பது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இலவச வேட்டி & சேலை வழங்கும் திட்டம் என்பது அடித்தட்டு மக்கள் நலன் சார்ந்த இரட்டை நோக்கங்களுக்காக 1983&ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டதாகும். தமிழர் திருநாளான பொங்கல் நாளில் ஏழை, எளிய மக்கள் புத்தாடை அணிய வேண்டும் என்பது ஒரு நோக்கம் என்றால், நலிவடைந்து வரும் கைத்தறித் தொழிலைப் பாதுகாப்பதும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டின் பெரும்பாலான நாட்களில் வேலைவாய்ப்பு வழங்குவதும் இரண்டாவது நோக்கம்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, “விசைத்தறியாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் ஆகிய இரு தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், ஒரு தரப்பினரின் நலன்களை புறக்கணித்து விட்டு, இன்னொரு தரப்பினரின் நலன்களை பாதுகாக்கக் கூடாது.
இது பெரும் தவறாகும். எனவே, இலவச வேட்டி & சேலை தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்து விட்டு, கடந்த ஆண்டைப் போலவே கைத்தறி நெசவாளர்களிடமிருந்து குறைந்தது மூன்றில் ஒரு பங்கு வேட்டி& சேலைகளையாவது கொள்முதல் செய்யும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க ‘எளிய வாழ்க்கை, நேர்மை அரசியல்’: ஜி.கே மூப்பனாரை நினைவுகூர்ந்த டி.டி.வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com