British woman passenger in Delhi: டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இங்கிலாந்து பெண் ஒருவர் தனது சமூக ஊடக நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
British woman passenger in Delhi: டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இங்கிலாந்து பெண் ஒருவர் தனது சமூக ஊடக நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on: March 13, 2025 at 11:22 am
புதுடெல்லி, மார்ச் 13, 2025: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலம் தான் நட்பாகப் பழகிய நபரை சந்திக்க டெல்லி வந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண் டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மானபங்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் நண்பராக அறிமுகமானவரை சந்திக்க இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்துள்ளார்.
மேலும், இது தொடர்பான புகாரும் டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மும்பை டூ அமெரிக்கா சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் ஷாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com