FD Rates: ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி.. இந்த வங்கியை நோட் பண்ணுங்க!
Fixed Deposit interest Rates: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் இந்த வங்கிகளை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஸ்திரமான வருமான வாய்ப்பை வழங்குகின்றன.
இந்தியாவில் பல்வேறு முதலீட்டு கருவிகள் உள்ளன. இதில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. ஏனெனில் இந்தத் திட்டங்கள் உறுதியான வருமான வாய்ப்பை வழங்குகின்றன.
இதற்கிடையில் 2025 பிப்ரவரியில் இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் வரை குறைக்கப்பட்டது.
இதை பின்பற்றி சில வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. இந்த நிலையில் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் வழங்கிவரும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளை பொறுத்தமட்டில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு ரூ.5 லட்சம் வரை மட்டுமே ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு உண்டு. இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
அந்த வகையில், 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
வட்டி விகிதம் (%)
ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.00
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
9.00
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
9.00
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.25
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.25
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.50
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.25
சூர்யாடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.60
பொறுப்பு துறப்பு: ஃபிக்ஸட் டெபாசிட் தொடர்பான வங்கிகளின் தரவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. முதலீட்டுக்கு முன் நன்கு ஆராய்ந்து முதலீடு செய்யவும். முதலீட்டாளரின் லாப நஷ்டங்களுக்கு திராவிடன் டைம்ஸ் எந்த வகையில் பொறுப்பேற்காது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.