Actress Nidhi Agarwal trained in horse riding: பிரபல நடிகை நிதி அகர்வால், இரண்டரை மாத காலமாக குதிரை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
Actress Nidhi Agarwal trained in horse riding: பிரபல நடிகை நிதி அகர்வால், இரண்டரை மாத காலமாக குதிரை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
Published on: March 12, 2025 at 10:28 am
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதியின் நடிப்பில் வெளியான, ‘கலகத் தலைவன்’ என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். நிதி அகர்வால் ஈஸ்வரன் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது நடிகை நிதி அகர்வால் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிரபலமாக நடித்து வருகிறார்.
இவர் படம் ஒன்றில் நடிப்பதற்காக இரண்டரை மாதம் குதிரை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பேட்டி ஒன்றில் நிதி அகர்வால் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய நிதி அகர்வால், ” பவன் கல்யாண் உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது; ஹரிஹர வீர மல்லு வரலாற்று கதை அம்சம் கொண்ட படமாகும். இந்தப் படத்தில் நடிப்பதற்காக நான் கிட்டத்தட்ட 2 1/2 மாதங்கள் வரை குதிரை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டேன்” என்றார்.
பிரபாஸின் படத்தில் பேயாக நடிக்கிறீர்களா?
இதற்கிடையில், பிரபாஸின் தி ராஜா சாப் படத்தில் தாம் பேயாக நடிக்கவில்லை என்பதையும் நிதி அகர்வால் உறுதிப்படுத்தினார். இதுகுறித்து பேசிய நிதி அகர்வால், ” நடிகர் பிரபாஸ் ஒரு இனிமையான மனிதர்.
அவருடன் பணிபுரிவது சிறந்த அனுபவமாக உள்ளது; அதே நேரம் இது எனது வாழ்க்கையின் சிறப்பான தருணங்களில் ஒன்று என்பதையும் நான் அறிவேன். தி ராஜா சாப், படத்தில் நான் பேயாக நடிக்கவில்லை. அதே நேரம் எனது நடிப்பை பார்த்து மக்கள் பிரமித்து போவார்கள் என நான் நம்புகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம்.. ரஜினி, விஜய், அஜித் அல்ல.. யார் அந்த ஹீரோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com