National Education Policy 2020: ரூ.2,000 கோடி அல்ல ரூ.10,000 கோடி கொடுத்தாலும் நாக்பூரின் நாசகார திட்டத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதிப்பட கூறியுள்ளார்.
National Education Policy 2020: ரூ.2,000 கோடி அல்ல ரூ.10,000 கோடி கொடுத்தாலும் நாக்பூரின் நாசகார திட்டத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதிப்பட கூறியுள்ளார்.
Published on: March 11, 2025 at 5:01 pm
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் செங்கல்பட்டில் நடந்த அரசு உதவி வழங்கும் விழாவில் இன்று (மார்ச் 11 2025) கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ரூபாய் 2000 கோடி அல்ல ரூபாய் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் நாக்பூரின் நாசக்கார திட்டத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
முன்னதாக செங்கல்பட்டு என்றாலே இங்கு நடைபெற்ற சுயமரியாதை பொதுக்கூட்டம் தான் நினைவுக்கு வருகிறது எனக் கூறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், ” தமிழ்நாட்டினர் குறித்து மத்திய அமைச்சர் அவதூறாக பேசி உள்ளார்.
அவர் பேசிய பேச்சுக்கு அரை மணி நேரத்தில் நமது எம்பிக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள்.
ஒரு மாணவனை கல்விக்கு உள்ளே கொண்டு வருவது தான் கல்விக் கொள்கையாக இருக்க வேண்டும் ஆனால் இவர்கள் மாணவனை கல்விக்கு வெளியே கொண்டு செல்ல பார்க்கிறார்கள். சிறு குழந்தைகளுக்கும் பொது தேர்வு என்கிறார்கள்.
இதைப் பார்த்து தான் நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்கிறோம். ஆனால் அவர்கள் நமக்கு நிதி தர மாட்டோம் என்கிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க; தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்ப்பு.. மார்ச் 12ல் திமுக கண்டன பொதுக்கூட்டம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com