Actor Kavins Mask movie first look: நடிகர் கவின், நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதனை நடிகை ஆண்ட்ரியா தனது ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்
Actor Kavins Mask movie first look: நடிகர் கவின், நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதனை நடிகை ஆண்ட்ரியா தனது ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்
Published on: February 26, 2025 at 12:12 pm
Updated on: February 26, 2025 at 12:32 pm
நடிகை ஆண்ட்ரியா, நடிகர் கவின் நடிப்பில் மாஸ்க் என்ற படம் உருவாகியுள்ளது. பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிளாக் மெட்ராஸுடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
And here’s the #firstlook of our baby #MASK !!! Yours truly has turned producer with this one 🎭 so wish me luck 🤞🏼🤞🏼🤞🏼
— Andrea Jeremiah (@andrea_jeremiah) February 26, 2025
Big thank you to everyone involved in the film 🙏🏻🙏🏻🙏🏻@GrassRootFilmCo @BlackMadra38572 @tsmgo_official #VetriMaaran @Kavin_m_0431 @andrea_jeremiah @gvprakash… pic.twitter.com/E7vfrKyqht
இந்த படத்தை 2025 மே மாதம் திரைக்கு கொண்டுவர விறுவிறுப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. ப்ளடி பெக்கர் படத்திற்குப் பிறகு நடிகர் கவின் புதிய படம் இது. இந்தப் படத்தை விக்ரனன் அசோக் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு கதாநாயகி வேடம் கிடையாது.
இதையும் படிங்க: இதற்காகத்தான் போலியான பெயரை பயன்படுத்தினேன்.. சுருதிஹாசன் சொன்ன விஷயம்!
அவர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கதாநாயகியாக ருகானி ஷர்மா என்பவர் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சார்லி, நடிகை விஜய் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: கமல்ஹாசன் ஓர் பாடசாலை; அவரிடம் படித்துக் கொண்டிருக்கிறேன்.. திரிஷா ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com