Selena Gomez new album: செலினா கோம்ஸ் தனது புதிய ஆல்பம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
Selena Gomez new album: செலினா கோம்ஸ் தனது புதிய ஆல்பம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
Published on: February 14, 2025 at 7:31 pm
பிரபல ஹாலிவுட் பாப் சிங்கரும், நடிகையுமான செலினா கோம்ஸ் தனது வருங்கால கணவரும் ரெக்கார்ட்டு புரோடியூசருமான பென்னி பிளாங்கோவுடன் இணைந்து ‘ஐ செட் ஐ லவ் யூ ஃபர்ஸ்ட்’ என்ற புதிய ஆல்பத்தை அறிவித்துள்ளார்.
செலினா கோம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு இத்தகவலை அறிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆல்பத்தின் வீடியோ படப்பிடிப்பிலிருந்து புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஆல்பத்தின் முதல் தனிப்பாடலான “ஸ்கேர்டு ஆஃப் லவ்விங் யூ” வெளியீட்டையும் அவர் அறிவித்தார்.”ஸ்கேர்டு ஆஃப் லவ்விங் யூ” பாடலுக்கான பாடல் வீடியோவும் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை கோம்ஸ், பிளாங்கோ மற்றும் ஃபின்னியாஸ் எழுதியுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
பிளாங்கோ ஒரு புகழ்பெற்ற ரெக்கார்ட்டு புரோடியூசர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். அவர் எட் ஷீரன், பி.டி.எஸ், எமினெம் மற்றும் ஜஸ்டின் பீபர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செலினா கோமஸின் ரசிகர்கள் ‘ஐ சேட் ஐ லவ் யூ ஃபர்ஸ்ட்’-க்கான வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.இது ஒரு தனித்துவமான இசைத் திட்டமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆல்பம் SMG மியூசிக்/ஃப்ரெண்ட்ஸ் கீப் சீக்ரெட்ஸ்/இன்டர்ஸ்கோப் ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியிடப்படும்.
இதையும் படிங்க மலையாள பக்கம் திரும்பிய நயன்தாரா.. 16 ஆண்டுக்குபின் இப்படி ஓர் படமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com