திருநெல்வேலி மருத்துவமனையில் தவறான சிகிச்சை? சுகாதாரத்துறையை மீட்டெடுப்பது எப்போது? டி.டி.வி தினகரன்

TTV Dhinakarans statement: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு என புகார்கள் எழுந்துள்ளன. அடியோடு சீரழிந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுப்பது எப்போது? என டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பி உள்ளார்.

Published on: February 14, 2025 at 3:48 pm

திருநெல்வேலி அரசு மருத்துவமனை தொடர்பான அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

இதே மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாததால் உயிரிழந்த தாயின் உடலை அவரது மகன் சுமார் 15 கி.மீ தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்ற அவலம் நடைபெற்றது.
இந்த நிலையில், தற்போது தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது அம்மருத்துவமனையின் அலட்சியப் போக்கு தொடர்வதையே வெளிக்காட்டுகிறது.

சிறுவன் உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க பொன்னாடைகள் தவிர்த்திடுவோம்.. கழகத்துக்கு நிதி வழங்கிடுவோம்.. டி.டி.வி தினகரன்

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?..அன்புமணி கண்டனம்
Anbumani Ramadoss

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?..அன்புமணி கண்டனம்

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது எப்படி?
Ayatollah Ali Khamenei killing

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com