மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா.. காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

Manipur CM resigns: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Published on: February 9, 2025 at 8:32 pm

மணிப்பூர் முதல்வர் ராஜினாமா: மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்கினார்.

மணிப்பூரில் மெய்தி மறும் குக்கி இன மக்கள் இடையே தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்கள் தொடரும் நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சிகள் முதல்வர் பிரேன் சிங்கை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மணிப்பூர் வன்முறை நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்கினார்.

மேலும், இதுவரை மணிப்பூர் மக்களுக்கு சேவையாற்றியதில் பெருமை கொள்கிறேன். மணிப்பூர் மக்கள் நலனுக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்த மத்திய அரசுக்கு நன்றி என்றும் பிரேன் சிங் கூறியுள்ளார்..

இதற்கிடையில், இது மிக தாமதமான நடவடிக்கை. மணிப்பூர் முதலமைச்சர் முன்பே தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

இதையும் படிங்க டெல்லி முதலமைச்சர் அதிஷி ராஜினாமா.. அடுத்து யார்? அரசியல் பரபரப்பு!

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா!
Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com