Health | ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடலாம் என்று தெரியுமா?
Health | ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடலாம் என்று தெரியுமா?
Published on: February 9, 2025 at 11:52 am
பொதுவாக மனிதன் நல்ல உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அன்றாட உணவில் சேர்க்கக்கூடிய ஆரோக்கியமான உணவுகள் பல உள்ளன. அவற்றில் முழு தானியங்கள், பழங்கள், கொட்டைகள் போன்றவை அடங்கும். இருப்பினும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெற பாதாம் கொட்டைகளை உணவுப்பட்டியலில் சோ்த்துக்கொள்ளலாம்.
ஏனெனில் பாதாம் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளில் ஒன்றாகும். பாதாமில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஈ, புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பொதுவாக பாதாம் அனைவரும் விரும்பி உண்ணக்கூடியதுவும் பல வீடுகளில் பிரதானமாக பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.
இருப்பினும் நாள் ஒன்றுக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி பலருக்கும் தெரியாது. எனவே ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும் என இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும்?
ஒரு நாளைக்கு 7 முதல் 8 பாதாம் சாப்பிடலாம். இது நாள் முழுவதும் உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும். பாதாம் கொட்டைகளை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே சாப்பிடலாம். மேலும் இதை தண்ணீரில் அல்லது பாலில் ஊறவைத்தோ அல்லது கூடுதல் சுவைக்காக வறுத்தோ சாப்பிடலாம். 28 கிராம் பாதாம் பருப்பில் சுமார் 160 கலோரிகள், 6 கிராம் புரதம், 14 கிராம் ஆரோக்கியமான கொழுப்புகள், 3.5 கிராம் நார்ச்சத்து, 7.3 மி.கி வைட்டமின் ஈ, 76 மி.கி மெக்னீசியம் மற்றும் 76 மி.கி கால்சியம் ஆகியவை அடங்கும்.
பாதாம் சாப்பிடுவதை யார் தவிர்க்க வேண்டும்?
பாதாமில் ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் இதை குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீரிழிவு அல்லது இதய பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு பாதாம் நல்லது. இருப்பினும், ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பாதாம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் கலோரிகளைக் குறைப்பவர்களும் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகமாக பாதாம் சாப்பிடுவது ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.
பாதாம் எப்போது சாப்பிட வேண்டும்?
காலையில் வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடுவதால் நீண்ட நேரம் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்கு முன் சிற்றுண்டியாக பாதாம் சாப்பிடலாம். அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு புரதம் நிறைந்த உணவுகளுடன் பாதாம் சேர்த்து சாப்பிடலாம். அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும் பசியைக் கட்டுப்படுத்தவும் இந்த பாதாம் கொட்டைகளை உணவு பட்டியலில் சேர்க்கலாம். இரவு பாதாம் சாப்பிடுவதால் பாதாமில் உள்ள மெக்னீசியம் சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
இதையும் படிங்க : குடற்புழு பிரச்சனை அண்டாது; வெறும் வயிற்றில் வேப்பிலை கொழுந்து, ஓமம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com