புஷ்பா 2 தி ரூல் படத்தின் நள்ளிரவு காட்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச் சாவு அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா 2 தி ரூல் படத்தின் நள்ளிரவு காட்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச் சாவு அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: December 18, 2024 at 11:28 am
Pushpa 2 Stampede | தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 நள்ளிரவு திரைக் காட்சியின் போது, திடீர் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூச்சுத் திணறல் காரணமாக மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் தெலுங்கானா அரசின் சுகாதார செயலாளர் டாக்டர் கிறிஸ்டினா ஐ.ஏ.எஸ் தெலுங்கானா அரசு சார்பில் கிம்ஸ் ஆகியோர் 9 வயது சிறுவனை முதலில் பார்வையிட்டனர்.
அதன் பின்னர் வெளியான ட்விட்டர் பதிவில், ” சிறுவனுக்கு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், சிகிச்சை நீடிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 9 வயது சிறுவன் ஸ்ரீ தேஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விரைவில் மருத்துவ அறிக்கை வெளியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஸ்ரீ தேஜாவின் உடல்நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம் என்றும் சுகாதார செயலாளர் டாக்டர் கிறிஸ்டினா தெரிவித்தார். இதற்கிடையில் சிறுவன் மூளைச் சாவு அடைந்துள்ளதும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் வெளியாகி உள்ளது.
புஷ்பா 2 ஹைதராபாத் தியேட்டர் நெரிசலில் ஏற்கனவே பெண் ஒருவர் உயிரிழந்தார். தற்போது, 9 வயது சிறுவனும் மூளைச் சாவு அடைந்துள்ளார். ஹைதராபாத் நெரிசல் தொடர்பாக ஏற்கனவே அல்லு அர்ஜுன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அவர் ஒருநாள் இரவு சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com