ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் ; 55 மணி நேர போராட்டம் ; நெகிழ்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 2 நாள் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளான்.

Published on: December 12, 2024 at 11:43 am

Updated on: December 12, 2024 at 3:55 pm

5-year-old boy rescued | ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் உள்ளது கலிகாட் கிராமம். இங்கு கடந்த 9-ந்தேதி பிற்பகல் 3 மணியளவில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 2 நாட்களாக விடிய, விடிய மீட்பு பணி நடைபெற்றது.

முதலில், 150 அடி ஆழத்தில் கிடந்த சிறுவன் சுவாசிக்க ஆக்சிஜன் குழாய் மூலம் செலுத்தப்பட்டது. சிறுவனின் ஒவ்வொரு அசைவும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து, கிணற்றில் துளையிடும் எந்திரங்களைப் பயன்படுத்தி குழிகள் தோண்டப்பட்து. பின்னர், வீரர்கள் உள்ளே இறங்கி 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடந்த சிறுவனை 55 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், நேற்று இரவு 10 மணியளவில் உயிருடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுவன் மயக்கமடைந்த நிலையில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 55 மணி நேர போராட்டதுக்கு பின்னர், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க மும்பையில் தாறுமாறாக ஓடிய பேருந்து ; 7 பேர் பலி ; முதல்வர் இழப்பீடு அறிவிப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com