ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளைக்கும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக மீண்டும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.
ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளைக்கும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக மீண்டும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.
Published on: December 8, 2024 at 9:42 pm
Updated on: December 9, 2024 at 8:44 am
George Soros Foundation Row | காங்கிரஸ் கட்சிக்கும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய குற்றச்சாட்டை மீண்டும் பாரதிய ஜனதா எழுப்பியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில், “சோனியா காந்தி, எஃப்.டி.எல்-ஏ.பி அறக்கட்டளையின் இணைத் தலைவராக, ஜார்ஜ் சொரோஸ் அறக்கட்டளையால் நிதியளிக்கப்பட்ட ஒரு அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளார். FDL-AP அறக்கட்டளை காஷ்மீரை ஒரு தனி அமைப்பாகக் கருதுவதாகக் கூறியது.
சோனியா காந்திக்கும் காஷ்மீர் ஒரு சுதந்திர தேசம் என்ற கருத்தை ஆதரித்த ஒரு அமைப்புக்கும் இடையேயான இந்த தொடர்பு, இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் செல்வாக்கையும், அத்தகைய தொடர்புகளின் அரசியல் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவர் சோனியா காந்தி, ஜார்ஜ் சொரோஸ் அறக்கட்டளையுடன் கூட்டுக்கு வழிவகுத்தது, “இந்திய அமைப்புகளில் வெளிநாட்டு நிதியின் செல்வாக்கைக் காட்டுகிறது” என்று பாஜக கூறியுள்ளது.
இதற்கிடையில் பாரதிய ஜனதாவின் நிஷிகாந்த் துபே ராகுல் காந்திக்கு 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com