திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக முதலைமச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக முதலைமச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
Published on: December 3, 2024 at 9:49 am
Updated on: December 3, 2024 at 2:24 pm
Tiruvannamalai Landslide | ஃபெங்கல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேற்று முன்தினம் இரவு வ. உ. சி. நகர் அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது 40 டன் எடை கொண்ட பாறை ஒன்று உருண்டு விழுந்தது.
இதில் இரண்டு வீடுகள் சேதம் அடைந்தன. மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு விழுந்த வீட்டின் இடிபாடுகளில் 7 பேர் சிக்கினர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மண் சரிவால் புதைந்த வீட்டிற்குள் ராஜ்குமார் அவரது மனைவி மீனா அவர்களது குழந்தைகள் இரண்டு பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளை சேர்ந்த 3 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் சிக்கினர். இந்நிலையில், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 5 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இதுகுறிதது அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
இதனிடையே, உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று இரவு நேரமானதால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீட்புப்பணியை இன்று மீண்டும் தொடர தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மோப்ப நாய்கள் மூலம் உடல்களை தேடும் பணி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com