Rain Alert | தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் மயிலாடுதுறை நாகை மாவட்டம் திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று அதிக கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் அரியலூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை கனமழையும் கள்ளக்குறிச்சி பெரம்பலூர் திருச்சி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரித இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
- இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
- கடலூரில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பருவ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க
Thirupparankundram hill Deepathoon: திருப்பரன்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
Anbumani Ramadoss: மருத்துவமனைகளை குடிப்பகங்களாக மாற்றியதே திமுகவின் சாதனை என விமர்சித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்….
Tharasu Shyam: திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது மேலிடத்திலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது….
O Panneerselvam: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்