உடல் தகனத்திற்காக ஒப்படைக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ஏன் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது?
February 6, 2025
உடல் தகனத்திற்காக ஒப்படைக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ஏன் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது?
Published on: August 20, 2024 at 6:45 am
Updated on: August 30, 2024 at 3:49 pm
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தாமதம் ஏன் ஏற்பட்டது என டெல்லி உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது முதுகலை பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று (ஆக.20, 2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் தாமதம் மற்றும் வழக்கைக் கையாள்வதில் உள்ள பிற நடைமுறைக் குறைபாடுகள் குறித்து மேற்கு வங்க அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
மேலும், “உடல் தகனத்திற்காக ஒப்படைக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ஏன் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது” எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கேள்வியெழுப்பினார்கள்.
செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com