காரசாரமான சுவையான கடாய் சிக்கன் செய்வது மிகவும் சுலபம்.
காரசாரமான சுவையான கடாய் சிக்கன் செய்வது மிகவும் சுலபம்.
Published on: November 24, 2024 at 9:47 am
Updated on: November 24, 2024 at 9:49 am
Kadai Chicken | சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் சூப்பர் காம்பினேஷனான காடாய் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
நெய் -1 ½ டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
வெங்காயம் – 3
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு -2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் -2 டீஸ்பூன்
தக்காளி விழுது – அரைத்தது
அரைத்த மசாலா தூள்
தண்ணீர் – 1கப்
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1
கசூரி மேத்தி – சிறிதளவு இஞ்சி -மெல்லியதாக நறுக்கியது
வறுக்க வேண்டியவை
மல்லி விதை -1½ ஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு -3
வர மிளகாய் -6
செய்முறை
ஒரு கடாயில் மல்லி விதைகள், சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, வரமிளகாய் சேர்த்து அடுப்பு தீயை லோ ஃபிளேமில் வைத்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான கடாயில் நெய் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயம் நன்கு சிவந்து பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்னர் இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கீறிய மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாடை நீங்கிய பின்னர் நன்கு அரைத்த மூன்று தக்காளியை இதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வேக விட வேண்டும்.பின்னர் இதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். இதனுடன் அரைத்த மசாலா பொருட்களில் மூன்று ஸ்பூன் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிட வேண்டும்.
ஐந்து நிமிடம் நன்கு வெந்த பிறகு இதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் மூடி போட்டு வேக விட வேண்டும். மூடி போட்ட ஐந்து நிமிடத்தில் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து கிளறி விட்டு பின்னர் மீண்டும் மூடி போட்டு வேக விட வேண்டும். பத்து நிமிடத்திற்கு பின்னர் அரைத்த மசாலாவில் மீதமுள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
சிக்கன் துண்டுகள் நன்கு வெந்த பின்னர் இதனுடன் சிறிது கஸ்தூரி மேத்தி மற்றும் நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து இறக்கவும். இப்போது காரசாரமான கடாய் சிக்கன் தயார். இது சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம், புலாவ் உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க ஹோட்டல் சுவையில் மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க; சுவை அள்ளும்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com