இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படுகின்றன. இந்த நிலையில் 3 வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை உயர்த்தியுள்ளன. அதிகப்பட்சமாக 8.85 சதவீதம் வரை வட்டி கிடைக்கின்றன.
இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படுகின்றன. இந்த நிலையில் 3 வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை உயர்த்தியுள்ளன. அதிகப்பட்சமாக 8.85 சதவீதம் வரை வட்டி கிடைக்கின்றன.
Published on: August 18, 2024 at 6:39 pm
முதலீட்டாளர்களுக்கு நற்செய்தியாக 3 வங்கிகள் தங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. அந்த வங்கிகள் ஆர்.பி.எல் வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் ஐ.டி.பி.ஐ வங்கி ஆகும். இந்த வங்கிகளின் புதிய எஃப்.டி வட்டி விகிதங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆர்.பி.எல் வங்கி
தனியார் வங்கியான ஆர்.பி.எல் வங்கி 500 நாள்கள் காலஅளவுள்ள விஜய் ஃபிக்ஸட் டெபாசிட் சிறப்பு எஃப்.டி-யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எஃப்.டி திட்டத்தில் 8.1 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் 8.85 சதவீதம் வரை வட்டி விகிதத்தை பெறுவார்கள்.
ஃபெடரல் வங்கி
ஃபெடரல் வங்கியானது 400 நாள்கள் மற்றும் 777 நாள்கள் மற்றும் 50 மாதங்கள் கொண்ட புதிய டெபாசிட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பொது குடிமக்களுக்கு முறையே 7.35%, 7.40% மற்றும் 7.40% வட்டி விகிதங்கள் வழங்கப்படும். மூத்த குடிமக்கள் முறையே 7.85%, 7.90% மற்றும் 7.90% வட்டி விகிதங்களைப் பெறுவார்கள்.
ஐ.டி.பி.ஐ வங்கி
ஐ.டி.பி.ஐ வங்கி 300 நாள்களில் முதிர்ச்சியடையும் சிறப்பு உத்சவ் எஃப்டிகளுக்கு 7.05% வட்டி விகிதத்தை பொது குடிமக்களுக்கு வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 300 நாள்கள் உத்சவ் எஃப்டிகளில் 7.55% வட்டி வழங்கப்படுகிறது. 700 நாள்கள் டெபாசிட்களுளுக்கு பொது குடிமக்களுக்கு 7.20% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.70% வழங்கப்படுகிறது.
மேலும், 375 நாள்கள் கால உத்சவ் எஃப்டிகளுக்கு, பொதுக் குடிமக்களுக்கு 7.25% வரையும், மூத்த குடிமக்களுக்கு 7.75% வரையும் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து, 444 நாள்கள் கால எஃப்.டி திட்டங்களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கும் 7.85 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கும் 7.35% வட்டி விகிதமும் கிடைக்கிறது. புதிய வட்டி விகிதங்கள் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com