India imposes 150 percent tax on American liquor: அமெரிக்க மதுபானங்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரை வரி விதிப்பதாக அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
India imposes 150 percent tax on American liquor: அமெரிக்க மதுபானங்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரை வரி விதிப்பதாக அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
Published on: March 12, 2025 at 12:46 pm
Updated on: March 12, 2025 at 12:54 pm
வாஷிங்டன், மார்ச் 12, 2025: அமெரிக்காவின மதுபானம் மற்றும் விவசாயப் பொருள்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை காரணமாக காட்டி, இந்தியா தனது பொருள்களுக்கு விதிக்கும் வரிகள் குறித்த பிரச்சினையை அமெரிக்கா மீண்டும் எழுப்பியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 11, 2025) நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கனடா குறித்த கேள்விக்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இதனை தெரிவித்தார் என்று பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அவர், கனடா பல தசாப்தங்களாக அமெரிக்காவையும் கடின உழைப்பாளர்களான அமெரிக்கர்களையும் சீர்குலைத்து வருகிறது.
அமெரிக்க மக்கள் மீதும் அமெரிக்க தொழிலாளர்கள் மீதும் கனடியர்கள் சுமத்தி வரும் வரி விகிதங்களைப் பார்த்தால், அது மிகவும் மோசமானது என்பது தெளிவாக தெரியும். உண்மையில், கனடாவை மட்டுமல்ல, முழு நாட்டிலும் உள்ள வரி விகிதத்தையும் காட்டும் ஒரு எளிய விளக்கப்படம் என்னிடம் உள்ளது என்றார்.
தொடர்ந்து, நீங்கள் கனடாவைப் பார்த்தால், அமெரிக்க சீஸ் மற்றும் வெண்ணெய், கிட்டத்தட்ட 300% வரி விதிப்புக்கு ஆளாகிறது என்றார்.
அமெரிக்க மதுபானங்கள் 150 சதவீத வரி
தொடர்ந்து, இந்தியாவில் அமெரிக்காவில் மதுபானங்களுக்கு 150 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்றார்.
இது குறித்து அவர், இந்தியாவைப் பாருங்கள், அமெரிக்க மதுபானத்திற்கு 150% வரி விதிக்கிறது. இந்தியாவில் இருந்து விவசாயப் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ஜப்பானில் 700 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க : இதுவே சரியான நேரம்: இந்தியாவுக்கு தொழில் தொடங்க வாருங்கள்; பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com