Pakistani Minister Hanif Abbasi: பாகிஸ்தானிடம் 130 அணுகுண்டுகள் உள்ளன என இந்தியாவை மிரட்டும் படி பேசியுள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி.
Pakistani Minister Hanif Abbasi: பாகிஸ்தானிடம் 130 அணுகுண்டுகள் உள்ளன என இந்தியாவை மிரட்டும் படி பேசியுள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி.
Published on: April 27, 2025 at 4:29 pm
இஸ்லாமாபாத், ஏப்.27 2025: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி, “எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி, “இந்தியா தண்ணீரை நிறுத்தினால், அவர்கள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் கோரி, ஷாஹீன் மற்றும் கஸ்னவி ஆகியவை வெறுமனே காட்சிக்கு அல்ல. நாங்கள் அவற்றை இந்தியாவுக்காக வைத்திருக்கிறோம். எங்களிடம் 130 அணுகுண்டுகள் உள்ளன. அவை பாகிஸ்தானில் அமைந்துள்ள இடம் உங்களுக்கு தெரியாது” என்றார்.
Pak Rail Minister Hanif Abbasi openly threatens NUCLEAR WAR after #PahalgamAttack:
— Prakash (@Prakash20202021) April 27, 2025
"Our Ghori, Shaheen, Ghaznavi missiles & 130 nuclear bombs are not for display — they are for INDIA. Stop water and be ready for war.
Our weapons are facing you." pic.twitter.com/ppAh8skSTm
பதற்றத்துக்கு என்ன காரணம்?
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட பஹல்காம் தாக்குதல் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள், உள்ளூர் பயங்கரவாதிகளுடன் இணைந்து சுற்றுலாப் பயணிகள் உள்பட 27 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் அமைச்சர்கள் வாய்க்கு வந்தபடி உளறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிந்து நதி நீரை தடுக்க இந்தியா சதி: பாகிஸ்தான் பிரதமர் அலறல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com