காசா அமைதி வாரியம்.. பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு

Donald Trump: காசா அமைதி வாரியம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.

Published on: January 19, 2026 at 6:38 pm

நியூயார்க், ஜன.19, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட “அமைதி வாரிய குழுவில் (Board of Peace) பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துள்ளார். இந்த தொடர்பான கடிதத்தை டிரம்ப் பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடிதத்தில், “மத்திய கிழக்கில் அமைதியை உறுதிப்படுத்தும் முயற்சியில் பிரதமர் மோடியை அழைப்பது எனக்கு பெரும் மரியாதை. உலகளாவிய மோதல்களை தீர்க்க புதிய அணுகுமுறையை தொடங்குவதற்கான வாய்ப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரியம், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசா பகுதியில் நடந்த இரண்டாம் கட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
கடந்த அக்டோபரில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், டிரம்பின் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டன. அமெரிக்கா, இந்த அமைதி வாரியத்தை காசா மற்றும் அதன் அப்பால் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் புதிய சர்வதேச அமைப்பாகக் கருதுகிறது.

டிரம்ப் தனது கடிதத்தில், 2025 செப்டம்பர் 29 அன்று அறிவித்த 20 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை மீண்டும் குறிப்பிட்டுள்ளார். அதில், காசாவை தீவிரவாதம் இல்லாத, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லாத பகுதியாக மாற்றுவது முக்கிய இலக்காக உள்ளது.

இதையும் படிங்க : பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை.. ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் வீரமரணம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com