ஜெர்மன் அருங்காட்சியகத்தில் அடைப்பட்டு கிடக்கும் பேரழகி: யார் இந்த எகிப்து ராணி நெஃபெர்டிட்டி?

ஜெர்மன் அருங்காட்சியகத்தில் அடைப்பட்டிருக்கும் எகிப்து ராணி நெஃபெர்டிட்டியின் மார்பளவு சிலையை எகிப்துக்கு திரும்ப கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Published on: September 10, 2024 at 11:00 am

Queen Nefertiti statue | பிரபல எகிப்திய தொல்பொருள் ஆய்வாளரும் முன்னாள் தொல்பொருள் அமைச்சருமான ஜாஹி ஹவாஸ், ஜெர்மனி பெர்லினில் உள்ள நியூஸ் அருங்காட்சியகத்தில் இருந்து ராணி நெஃபெர்டிட்டியின் பாரோனிக் மார்பளவு சிலையை எகிப்து திரும்ப கொண்டுவருவதற்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.
ராணி நெஃபெர்டிட்டியின் புகழ்பெற்ற வர்ணம் பூசப்பட்ட இந்த சுண்ணாம்பு மார்பளவு சிலை, கெய்ரோவிற்கு தெற்கே 300 கிமீ (185 மைல்) தொலைவில் உள்ள டெல் எல்-அமர்னாவில் 1912 இல் ஜெர்மன் தொல்பொருள் பணியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இது அடுத்த ஆண்டு பெர்லினுக்கு அனுப்பப்பட்டது.

அமர்னா நெஃபெர்டிட்டியின் கணவர் ஆவார். இவர்கள் ஆட்சிக் காலம் கிமு 1335 வரை ஆகும். 18 வது வம்சத்தின் பார்வோன் அகெனாடெனின் இவர்களின் தலைநகராக இருந்தது.
அகெனாடென், மதவெறி அரசன் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆட்சி எகிப்திய கலையில் ஒரு தீவிர மாற்றத்தை அறிமுகப்படுத்தியது. எனினும் இவர் ஆட்சிக்காலத்தில் ஏதென் கடவுள் தவிர மற்ற கடவுள்கள் ஊக்குவிக்கப்படவில்லை. அது இழிவானது என்றார்.

இது குறித்து பேசிய தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ், “எகிப்தில் இருந்து சட்டப்பூர்வமாக எடுத்துச் செல்லப்பட்ட கலைப்பொருட்கள் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தான் கோரவில்லை.
ஆனால், நெஃபெர்டிட்டியின் மார்பளவு, ரொசெட்டா ஸ்டோன் மற்றும் டென்டெரா ராசி எங்களின் கலாசார பிரதிபலிப்பாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க :  87 வயதில் 33 ஆயிரம் கி.மீ பயணம்: வியக்க வைக்கும் போப் ஃபிரான்சிஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com