Pakistan Afghanistan ceasefire : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ‘உடனடி போர்நிறுத்தத்திற்கு’ ஒப்புக்கொண்டன என கத்தார் தெரிவித்துள்ளது.
Pakistan Afghanistan ceasefire : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ‘உடனடி போர்நிறுத்தத்திற்கு’ ஒப்புக்கொண்டன என கத்தார் தெரிவித்துள்ளது.
Published on: October 19, 2025 at 11:20 am
தோகா, அக் 19 2025: 48 மணி நேர போர் நிறுத்தத்திற்குப் பிறகு பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மீண்டும் தாக்குதல்களை தொடங்கின.
இந்நிலையில். சனிக்கிழமை (அக்.18, 2025) இரு நாடுகளும் “உடனடி போர் நிறுத்தத்திற்கு” ஒப்புக்கொண்டதாக கத்தார் உறுதிப்படுத்தியுள்ளது.
Statement | Pakistan and Afghanistan Agree to an Immediate Ceasefire During a Round of Negotiations in Doha#MOFAQatar pic.twitter.com/fPXvn6GaU6
— Ministry of Foreign Affairs – Qatar (@MofaQatar_EN) October 18, 2025
கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் வரும் நாள்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், தன் செயல்பாட்டை நம்பகமான மற்றும் நிலையான முறையில் சரிபார்ப்பதற்கும், இரு நாடுகளிலும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கு பங்களிப்பதற்கும் தொடர் கூட்டங்களை நடத்தவும் ஒப்புக் கொண்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி
பாகிஸ்தான் தாக்குதலில் பலியானவர்களில் ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) இறப்புகளை உறுதிப்படுத்தியதுடன், மூன்று வீரர்களும் ஒரு போட்டிக்காக அந்தப் பகுதியில் இருந்ததாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவர்கள், ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட கபீர் ஆகா, சிப்கதுள்ளாஜ் மற்றும் ஹாரூன் ஆகியோர் ஆவார்கள்.
இந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் மரணத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடுமையான கண்டனத்துடன் இரங்கலையும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : இஸ்ரேலிய பணயக் கைதிகள் 7 பேரை விடுத்த ஹமாஸ்.. உறுதிப்படுத்திய இஸ்ரேல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com