Iran Israel War: ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் போரில் நாங்கள் முன்னிலை வகிக்கிறோம் ஈரான் பலவீனமடைந்துள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Iran Israel War: ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் போரில் நாங்கள் முன்னிலை வகிக்கிறோம் ஈரான் பலவீனமடைந்துள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Published on: March 20, 2026 at 2:06 pm
டெல் அவிவ், மார்ச் 20 2026: ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில் ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திறன்களை கடுமையாகத் தகர்த்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். முதலில், நான் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்த அவர், “ஈரானால் இனி யுரேனியம் செறிவூட்டவோ, பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கவோ முடியாது. போரில் நாங்கள் முன்னிலை வகிக்கிறோம்; ஈரான் பலவீனமடைந்துள்ளது” என்றார்.
ஊடகங்களிடம் பேசிய அவர், “ஈரானின் ஏவுகணை உற்பத்திக்கான கூறுகளையும், அணு ஆயுதத் திட்டங்களுடன் தொடர்புடைய தொழிற்சாலைகளையும் தொடர்ந்து இலக்காகக் கொண்டு தாக்கி வருகிறோம். அவர்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆயுதக் கிடங்குகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
மேலும், இந்தப் போரில் அமெரிக்காவை இஸ்ரேல் இழுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அவர், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது நாட்டின் நலனை முன்னிட்டு தான் முடிவெடுக்கிறார். அவருக்கு யாரும் அறிவுரை கூற முடியாது” என அவர் தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்ப்புடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்படுகிறோம். இரு நாடுகளின் ராணுவம் மற்றும் உளவுத்துறைகள் இணைந்து மின்னல் வேகத்தில் இலக்குகளை அடைந்து வருகின்றன. மேலும், “இந்தப் போரில் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டாண்மை முக்கியமானது. நாங்கள் மத்திய கிழக்கு மட்டுமின்றி உலகத்தின் பாதுகாப்பிற்காகவும் செயல்படுகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், ட்ரம்ப்பின் கோரிக்கையை ஏற்று, ஈரானின் முக்கிய எரிவாயு வளாகங்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். தெற்கு பார்ஸ் எரிவாயு வளாகத்துக்கு எதிரான தாக்குதல் இஸ்ரேல் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டது என்றும், எதிர்கால தாக்குதல்களை தள்ளிப் போடுமாறு அமெரிக்கா கேட்டதாகவும் கூறினார்.
ஈரானின் ராணுவ அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் மேல்நிலையிலும் குழப்பம் நிலவுகிறது. இந்தப் போர் எதிர்பார்த்ததை விட விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க அமெரிக்கா-ஈரான் போருக்கு எதிர்ப்பு.. ஜோ கென்ட் ராஜினாமா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com