Dengue fever: வியட்நாம் நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
Dengue fever: வியட்நாம் நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

Published on: November 4, 2025 at 11:52 am
Updated on: November 4, 2025 at 12:21 pm
ஹனோய், நவ.4, 2025: வியட்நாமின் தலைநகர் ஹனோயில் கடந்த வாரத்தில் டெங்கு காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 486 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஹனாய் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தகவலின்படி, நகரில் 23 கிராமங்கள் மற்றும் வார்டுகளில் புதிய தொற்றுப் பரவல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் தற்போது செயல்பாட்டிலுள்ள தொற்று குழுக்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை எந்த மரணமும் பதிவாகவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஹனாயில் 4,300க்கும் மேற்பட்ட டெங்கு காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட சுமார் 20 சதவீதம் குறைவாகும்.
சுகாதார அதிகாரிகள், தொற்று ஏற்பட்ட பகுதிகளில் பூச்சி குறியீடுகள் (insect indices) மிக அதிக அபாய நிலையை காட்டுகின்றன என்றும், இது மேலும் பரவலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர். நகரம் முழுவதும் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த உள்ளூர் சுகாதார நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அந்தரங்க உறுப்புகளை தொட அனுமதிக்காதீர்.. பாடம் எடுத்த ஆசிரியை.. வைரல் வீடியோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com