Tsunami alerts: சிலி மற்றும் அர்ஜென்டினாவின் தெற்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tsunami alerts: சிலி மற்றும் அர்ஜென்டினாவின் தெற்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on: May 2, 2025 at 8:13 pm
Updated on: May 2, 2025 at 8:14 pm
சாண்டியாகோ (சிலி), மே 2 2025: சிலி மற்றும் அர்ஜென்டினாவின் தெற்கு கடற்கரைகளில் வெள்ளிக்கிழமை (மே 2 2025) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நிலநடுக்கத்திற்குப் பிறகு நாட்டின் தெற்குப் பகுதிக்கு சிலி அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்தனர்.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், “சுனாமி எச்சரிக்கை காரணமாக, மாகல்லன்ஸ் பிராந்தியத்தின் கடலோரப் பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான மண்டலத்திற்கு வெளியேற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, அர்ஜென்டினா நகரமான உஷுவாயாவிலும் நிலநடுக்க எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. நிலநடுக்கத்தின் மையப்பகுதி அர்ஜென்டினா நகரமான உஷுவாயாவிலிருந்து 219 கிலோமீட்டர் (173 மைல்) தெற்கே கடலுக்கு அடியில் இருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஆம் ஆத்மி பிரமுகர் மகள் கனடாவில் மரணம்; கடற்கரையில் பிணமாக கிடந்தார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com