Suicide attack on Pakistan cantonment: பாகிஸ்தானின் கண்டோன்மெண்ட் பகுதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தப்பட்சம் 6 பேர் கொல்லப்பட்டனர். 6 பயங்கரவாதிகள் செயலிழக்கப்பட்டனர்.
Suicide attack on Pakistan cantonment: பாகிஸ்தானின் கண்டோன்மெண்ட் பகுதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தப்பட்சம் 6 பேர் கொல்லப்பட்டனர். 6 பயங்கரவாதிகள் செயலிழக்கப்பட்டனர்.
Published on: March 5, 2025 at 9:39 am
கைபர் பக்துன்வா (பாகிஸ்தான்) மார்ச் 4 2025: பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4 2025) நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தபட்சம் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான பன்னுவில் உள்ள பிரதான கண்ட்ரோல்மெண்டில் உள்ள எல்லைச் சுவரில் நடந்துள்ளது.
வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி இந்த தற்கொலை படை தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்தக் கொடூர தாக்குதலில் குறைந்தபட்சம் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் என்றும் 16 பேர் காயமுற்றுநர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஆறு பயங்கரவாதிகளை செயலிழக்கச் செய்தனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலானது சரியாக செவ்வாய்க்கிழமை மாலை சூரிய அஸ்தமன நேரத்தில் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட இடம் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பெஷாவர் பகுதியில் இருந்து தென்மேற்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த தற்கொலைப்படை பயங்கரவாத தாக்குதலுக்கு ஜெய்ஷ்- அல்- பர்ஷான் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கையில், “இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இதில் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த தற்கொலை படை தாக்குதலில் ஐந்து அல்லது ஆறு நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மெக்சிகோவில் பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதல்.. தீக்கிரையான 41 பேர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com