South Korean Aircrash | தென் கொரிய விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் 85 பேர் பலியாகினர்.
South Korean Aircrash | தென் கொரிய விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் 85 பேர் பலியாகினர்.
Published on: December 29, 2024 at 10:54 am
Updated on: December 29, 2024 at 1:29 pm
தென் கொரிய விமான விபத்து | தென் கொரிய விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வணிக விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விபத்துக்குள்ளானதில் 85 பேர் உயிரிழந்தனர்.
பாங்காக்கில் இருந்து புறப்பட்ட ஜெஜு ஏர் விமானம் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் தீப்பிடித்தது. விமானத்தில் 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். விபத்தில் 85 பேர் உயிரிழந்தனர் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முவான் தீயணைப்புத் துறையின் தலைவர் லீ ஜங்-ஹியூன் கூறுகையில், “லேண்டிங் கியர் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
உயிரிழந்தவர்களில் 45 பேர் பெண்கள் மற்றும் 35 பேர் ஆண்கள் என்று லீ கூறினார். இறந்தவர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை. பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com