காபூல் மருத்துவமனை மீது பாக். கொடூர தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு

Pakistan Airstrike: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Published on: March 17, 2026 at 11:47 am

காபூல், மார்ச் 17 2026: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப் பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்தாக்குதலில் குறைந்தது 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் சுமார் 250 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் இரவு நேரத்தில் நடைபெற்றதாகவும், 2,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையின் பெரும்பகுதி சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அப்பாவி பொதுமக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்” என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுத்து, தாங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை அல்லாது, பயங்கரவாத அமைப்புகளின் தளங்களையே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையேயான அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் வசதிகள் மீது தாக்குதல் நடத்துவது உலகளவில் கடுமையான கண்டனத்திற்குரியது. இந்த சம்பவம் பிராந்திய அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஹோர்முஸ் நீரிணையை காக்க உதவ வேண்டும் : டொனால்ட் டிரம்ப்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com