Bangladesh Air Force jet crashes into Dhaka school: வங்கதேச நாட்டின் டாக்காவில் உள்ள பள்ளிக்கூடம் மீது வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
Bangladesh Air Force jet crashes into Dhaka school: வங்கதேச நாட்டின் டாக்காவில் உள்ள பள்ளிக்கூடம் மீது வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
Published on: July 22, 2025 at 10:03 am
டாக்கா, ஜூலை 22 2025: வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில் திங்கள்கிழமை (ஜூலை 21 2025) வங்கதேச விமானப்படையின் பயிற்சி விமானம் மோதியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். மேலும், இதில் 171 பேர் காயமடைந்தனர். டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட F-7 ஜெட் விமானம் மோதியது.
வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. மீட்புப் பணியாளர்கள் காயமடைந்தவர்களை ஆறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில், விபத்து நடந்த இடத்திலிருந்து தீ மற்றும் கரும்புகை மூட்டங்கள் வெளியேறுவதை தொலைக்காட்சி காட்சிகள் காட்டின.
இராணுவம் அறிக்கை
இது தொடர்பாக வங்கதேச ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில், “வங்காளதேச விமானப்படையின் F-7 BGI பயிற்சி விமானம் உத்தராவில் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் மதியம் 1:06 (0706 GMT) மணிக்கு புறப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விசாரணைக்கு உத்தரவு
இதற்கிடையில், விபத்துக்கான காரணத்தை அரசாங்கம் விசாரித்து அனைத்து வகையான உதவிகளையும் உறுதி செய்யும் என்று வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறினார். மேலும் அவர், “இந்த விபத்தில் விமானப்படை, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி ஊழியர்கள் மற்றும் பிறருக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இது தேசத்திற்கு ஆழ்ந்த துக்கத்தின் தருணம்” என்றார்.
இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதாக யூனுஸின் ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கூறினார்.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com