ஐக்கிய அரபு அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது

Iran Israel War: ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பிய காரணங்களுக்காக 19 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: March 17, 2026 at 1:24 pm

அபுதாபி, மார்ச் 17 2026: ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா போர் காரணமாக மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. UAE அரசு முன்பே குடியிருப்பாளர்களுக்கு “தாக்குதல் இடங்களை படம் பிடிக்க வேண்டாம், வீடியோக்களை பகிர வேண்டாம்” என்று எச்சரித்திருந்தது.

இந்நிலையில், ஈரான்– இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான போர் தொடர்பான தவறான மற்றும் உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. மேலும், தாக்குதல் நடந்த இடங்களை படம் பிடித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் போர் குறித்து சமூக ஊடகங்களில் தவறான, உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோக்களை பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 23 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவுவது, அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. UAE அரசு, மக்களின் பாதுகாப்பு மற்றும் தகவல் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய தூதரகம், கைது செய்யப்பட்டவர்களின் நிலையை கவனித்து வருகிறது.

இதையும் படிங்க: காபூல் மருத்துவமனை மீது பாக். கொடூர தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com