1.5-Ton AC Daily Cost: உங்கள் வீட்டின் 1.5 டன் ஏசி தினமும் 8 முதல் 10 மணி நேரம் இயங்கினால், அதன் செலவு என்ன தெரியுமா? இதோ பார்க்கலாம்.
1.5-Ton AC Daily Cost: உங்கள் வீட்டின் 1.5 டன் ஏசி தினமும் 8 முதல் 10 மணி நேரம் இயங்கினால், அதன் செலவு என்ன தெரியுமா? இதோ பார்க்கலாம்.

Published on: March 30, 2026 at 12:19 pm
Updated on: March 30, 2026 at 12:20 pm
சென்னை, மார்ச் 30, 2026: தினமும் 8–10 மணி நேரம் ஏசி ஓடினால், 1.5 டன் ஏசிக்கு எவ்வளவு செலவாகும்? என்பது குறித்து இதில் பார்க்கலாம். கோடைக்காலம் இப்போது தான் தொடங்கியுள்ளது, பல வீடுகளில் ஏசிகள் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளன. நீங்கள் உங்கள் ஏசியைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தால், அதற்காக எவ்வளவு செலவாகும் என்பதை பார்க்கலாம்.
உதாரணமாக, 1.5 டன் ஏசி உங்களை கடும் வெப்பத்திலிருந்து மீட்கும், ஆனால் அதற்கும் ஒரு செலவு உண்டு. இந்தக் கட்டுரையில், 3-ஸ்டார் மற்றும் 5-ஸ்டார் ஏசிகள் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பது குறித்த பார்க்கலாம்.
மின்சார பயன்பாடு
பொதுவாக, ஒரு சாதாரண 1.5 டன் ஸ்ப்லிட் ஏசி எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்பது அதன் ஸ்டார் மதிப்பீடு, பயன்படுத்தும் நேரம், திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும்.
1.5 டன் 3-ஸ்டார் ஏசி: மின்சார பயன்பாடு மற்றும் மாதாந்திர கட்டணம்
ஒரு மணி நேரத்தில் சுமார் 1.5 முதல் 1.7 யூனிட்கள்
தினசரி (10 மணி நேரம்): சுமார் 17 யூனிட்கள்
மாதாந்திர (30 நாட்கள்): சுமார் 510 யூனிட்கள்
செலவு (₹8/யூனிட்): மாதம் ₹4,080
1.5 டன் 5-ஸ்டார் ஏசி
ஒரு மணி நேரத்தில் சுமார் 1.2 யூனிட்கள்
தினசரி (8 மணி நேரம்): சுமார் 9.6 யூனிட்கள்
மாதாந்திர (30 நாட்கள்): சுமார் 288 யூனிட்கள்
செலவு (₹8/யூனிட்): மாதம் ₹2,304
ஸ்டார் மதிப்பீடு ஒரு ஏசி எவ்வளவு மின்சார திறன் வாய்ந்தது என்பதை தீர்மானிக்க உதவுகிறது. அதிக ஸ்டார் மதிப்பீடு என்றால் அதிக திறன், குறைந்த மின்சாரச் செலவு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெற்றோர் அனுமதியுடன் குழந்தைகளுக்கு வாட்ஸ்அப் உரையாடல் வசதி.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com