ஒலா எலக்ட்ரிக் சி.எஃப்.ஓ பதவி விலகல்.. புதிய சி.எஃப்.ஓ யார்?

Harish Abichandani: ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் CFO ஹரிஷ் அபிச்சந்தானி திடீரென பதவி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, தீபக் ரஸ்தோகி உடனடியாக புதிய CFO-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

Published on: January 20, 2026 at 8:17 pm

புதுடெல்லி, ஜன.20, 2026: ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சி.எஃப்.ஓ (CFO) ஆக, தீபக் ரஸ்தோகி நியமிக்கப்பட்டுள்ளார். ஹரிஷ் அபிச்சந்தானி திடீரென பதவி விலகியுள்ள நிலையில் இந்த உடனடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், பவிஷ் அகர்வால் தலைமையிலான இந்த நிறுவனம், தற்போது விற்பனை மற்றும் சந்தைப் பங்கு குறைவால் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.

பதவி விலகல் ஏன்?

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ஹரிஷ் அபிச்சந்தானி தனது ராஜினாமா கடிதத்தில், “தனிப்பட்ட காரணங்களால் நான் என் பதவியை விலகுகிறேன். ஓலாவின் பயணத்தில் உங்கள் பார்வையுள்ள தலைமையின் கீழ் ஒரு பகுதியாக இருந்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.
முழு ஓலா குழுவுக்கும், இயக்குநர் குழுவுக்கும் அவர்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஓலா வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அபிச்சந்தானி 2023 நவம்பர் மாதம் முதல் ஓலா எலக்ட்ரிக் CFO ஆக பணியாற்றி வந்தார். அவரது காலத்தில், பவிஷ் அகர்வால் தலைமையிலான நிறுவனம் 2024-இல் பங்குச்சந்தையில் மிகப்பெரிய தொடக்கத்துடன் வெளியானது. அதன் பின்னர், விற்பனை மந்தமாகி, 2025 நவம்பரில் நிறுவனம் தனது வருவாய் கணிப்பை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அச்சு, டிஜிட்டல், ஆடியோபுக் மதீப்பிடு.. இந்திய புத்தக சந்தை அறிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com