ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 ரீசார்ஜ் திட்டத்தின் பலன்களை பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது.
February 6, 2025
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 ரீசார்ஜ் திட்டத்தின் பலன்களை பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது.
Published on: August 25, 2024 at 11:28 am
ரூ.198 விலையில் அன்லிமிடெட் பலன்கள் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் ரீசார்ஜ் திட்டம் குறித்து இங்கு பார்ப்போம். ரிலையன்ஸ் ஜியோ ரூ.198க்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய திட்டத்தில் பல்வேறு பலன்கள் உள்ளன.
அதாவது திட்டத்தில் 5ஜி அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. ஒருநாளைக்கு 2 ஜி.பி., 4ஜி.பி டேட்டா கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வரை அனுப்பிக் கொள்ளலாம். இதுதவிர, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் வசதிகளும் உள்ளன. எனினும் இந்தத் திட்டம் 14 நாள்கள் மட்டுமே வேலிடிட்டி கொண்டது ஆகும்.
இந்தத் திட்டம் ஜியோவின் மற்றொரு திட்டமான ரூ.349 உடன் ஒப்பிடப்படுகிறது. இந்தத் திட்டம் 28 நாள்கள் வேலிடிட்டி கொண்டது. ஆனால் ரூ.198 திட்டம் 14 நாள்கள் மட்டுமே வேலிடிடடி கொண்டது ஆகும்.
ரூ.198 ரீசார்ஜ் திட்டம் என்பது மாதத்துக்கு இருமுறையாக ரீசார்ஜ் செய்தால் ரூ.396 ஆகும். அந்த வகையில் ரூ.349 திட்டம் வாடிக்கையாளருக்கு கூடுதல் பணப் பலனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com