160 நாள் வேலிடிட்டி; அன்லிமிடெட் கால்: இந்த பி.எஸ்.என்.எல் திட்டம் தெரியுமா?

BSNL Recharge Plan | அன்லிமிடெட் கால், 160 நாள் வேலிடிட்டி கொண்ட பி.எஸ்.என்.எல் திட்டம் குறித்து இதில் பார்க்கலாம்.

Published on: September 13, 2024 at 7:50 pm

Updated on: September 13, 2024 at 9:17 pm

BSNL Recharge Plan | ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், மற்றும் விஐ நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்விற்குப் பிறகு, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளனர். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஒப்பிடும்போது, பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள் சிறந்த விலை மலிவானவையாக உள்ளன.

பிஎஸ்என்எல் பல குறைந்த விலை திட்டங்களை வழங்குகிறது. சிறந்த பயன்கள் கொண்ட மலிவான திட்டங்களை தேடுபவர்களுக்கு பிஎஸ்என்எல்-இன் ரூ. 997 திட்டம் உகந்ததாக இருக்கும். இந்த ரீசார்ஜ் திட்டம் 160 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ. 997 ரீசார்ஜ் திட்டம்- சிறப்பு அம்சங்கள்

இத்திட்டத்தில் அதிவேகம் கொண்ட தினசரி 2 ஜிபி டேட்டாக்களைப் பெறலாம். தினசரி அதிகமான டேட்டாக்களை தேடும் பயனர்களுக்கு, இந்த பிஎஸ்என்எல் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், அன்லிமிட்டட் காலிங் வசதியையும் கொடுக்கிறது.

இத்திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வரை இலவசமாக அனுப்பலாம். கூடுதலாக, இத்திட்டத்தில் ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் டியூன்ஸ், வாவ் எண்டர்டைன்மென்ட் மற்றும் கேமிங் வசதியையும் தருகிறது. மேலும் பல்வேறு சில திட்டங்களும் உள்ளன.

வோடபோன் ரூ. 997 திட்டம்

வோடபோன் ( Vi) யின் ரூ. 997 ரீசார்ஜ் திட்டம், பி.எஸ்.என்.எல். -ன் இதே திட்டத்துடன் ஒப்பிடும்போது, 84 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். பி.எஸ்.என்.எல். திட்டம் போலவே, தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ்.க்களை வழங்குகிறது.

கூடுதலாக, வோடபோன் பயனர்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மிக்க அளவில் டேட்டாவைப் பயன்படுத்தலாம். இதற்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லை. இரவு நேரங்களில் அதிகம் டேட்டா பயன்படுத்துபவர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டம் உகந்ததாக இருக்கும்.

இதையும் படிங்க:  டெய்லி 2 ஜி.பி டேட்டா; 28 நாள் வேலிடிட்டி: ஜியோ ரூ.223 ரீசார்ஜ் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com