மதுரையில் விஜய் கட்சி கொடிகம்பம் அமைக்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
February 6, 2025
மதுரையில் விஜய் கட்சி கொடிகம்பம் அமைக்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Published on: August 25, 2024 at 7:13 am
Updated on: August 25, 2024 at 7:14 am
மதுரையில் நடிகர் விஜய்யின் த.வெ.க கொடிக்கம்பம் நட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். இந்தக் கட்சியின் கொடி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சி கொடியில் இரு களிறுகள் (யானைகள்) பிளிறுகின்றன.
கொடியின் நடுவில் மஞ்சள் நிறத்திலும், முதலிலும் முடிவிலும் சிவப்பு நிறத்திலும் காணப்பட்டது. இந்தக் கட்சி கொடியை தொடர்ந்து மதுரை கோரிப்பாளையத்தில் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கு காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்து காவல் துறை அளித்துள்ள விளக்கத்தில், “மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழை இணைக்காததால் அனுமதி அளிக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் விஜய் கட்சி கொடிகம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கட்சி மாநாடு அமைக்க இடம் தேர்வு செய்வதிலும் சிக்கல் நிலவுகிறது. இதுவரை கட்சி மாநாடு நடத்த கேட்ட இடத்தில் அனுமதி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
முதலில் மாநாடு நடத்த திருச்சி தேர்வு செய்யப்பட்டதாகவும், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கள்ளக்குறிச்சியில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த இடமும் மாற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதற்கும் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com