Inigo Irudayaraj: விஜய் ஒரு மாய பிம்பம்; விஜயை பேசி பெரிதாக்க வேண்டாம் என திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கூறியுள்ளார்.
Inigo Irudayaraj: விஜய் ஒரு மாய பிம்பம்; விஜயை பேசி பெரிதாக்க வேண்டாம் என திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கூறியுள்ளார்.

Published on: March 31, 2026 at 6:01 pm
திருச்சி மார்ச் 31, 2026; தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார்; இது திமுகவின் சிட்டிங் எம்எல்ஏவான இனிகோ இருதயராஜ் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்த, இனிகோ இருதயராஜ், “அண்ணா அறிவாலயத்தை (திமுக தலைமையகம்) தேவாலயம் ஒருபோதும் கைவிடாது” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும், நான் யார்? நான் கிறிஸ்தவன் தானே? எனவும் இனிகோ இருதயராஜ் அப்போது பேசியிருந்தார்.
இந்த நிலையில் இனிகோ இருதயராஜின் பேச்சு மதரீதியாக, மக்களை தூண்டும் வகையில் இருப்பதாக அப்போதே புகார்கள் எழுந்தன; இதற்கிடையில் தற்போது நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் குறித்து இனிகோ இருதயராஜ் பேசுகையில், ” விஜய் ஒரு மாய பிம்பம்; விஜய் பேசி பேசி பெரிதாக்க வேண்டாம்” என்றார்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பல்வேறு நல்ல காரியங்களை செய்திருப்பதாகவும் அதனால் தான் திமுகவில் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இனிகோ இருதயராஜ் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வாக்குப் பதிவுடன் நடைபெறுகிறது; இதில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணிக்கை செய்யப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடப்பட்டது.
இதையும் படிங்க; எடப்பாடி பழனிசாமியை வெளியேற்றும் தேர்தல்.. காஞ்சிபுரத்தில் உதயநிதி பரப்புரை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com