திமுக கூட்டணியில் இருந்து விலகல்.. வேல்முருகன் அறிவிப்பு!

Assembly Election 2026: திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

Published on: March 22, 2026 at 12:53 pm

சென்னை மார்ச் 22, 2026; திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறுவதாக அக்கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் பேசிய அவர், ” திமுகவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 சீட்டு ஒதுக்குவதாக தெரிவித்தார்கள்; எங்களைப் பொறுத்தவரை ஒரு தொகுதி என்பது கூட பெரிய பொருட்டல்ல; ஆனால் நாங்கள் கொடுத்த பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை” என்றார்.

மற்ற கட்சிகள்..

மேலும் பேசிய வேல்முருகன் எம்.எல்.ஏ., மற்ற கட்சிகள் எந்த கோரிக்கையும் வைக்காமல் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கிறார்கள்; நீங்கள் மட்டும் ஏன் இத்தனை கோரிக்கைகளை முன் வைக்கிறீர்கள் என்பன போன்ற தொனி அவர்களின் பேச்சில் இருந்தது” என்றார்.

என்.டி.ஏ கூட்டணியில்..

மேலும் தாம் எம் டி ஏ கூட்டணியில் சேரப் போவதில்லை என்பதையும் தெரிவித்தார்; இது தொடர்பாக பேசிய வேல்முருகன், ” திமுகவை பொருத்தமட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரிகளின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது; ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. எங்களது கோரிக்கைகளையும் திமுக அரசு பொருட்படுத்தவில்லை; மேலும் நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தும் என்.டி.ஏ கூட்டணியில் நாங்கள் சேர மாட்டோம்” என்றார்.

இதையும் படிங்க; சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் மாஞ்சோலை.. மொத்தம் எத்தனை வாக்காளர்கள் தெரியுமா?

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா!
Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com