TVK Vijay : நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய், இன்று மாலை மும்பை சென்றுள்ளார்.
TVK Vijay : நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய், இன்று மாலை மும்பை சென்றுள்ளார்.

Published on: March 20, 2026 at 9:50 pm
சென்னை மார்ச் 20, 2026; நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் இன்று மாலை (வெள்ளிக்கிழமை) மும்பை சென்றார்; இதற்காக இவர் இன்று மாலை தனது காரில் ஏர்போர்ட்டுக்கு கிளம்பினார். அப்போது நடிகர் விஜய்யுடன், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் யாரும் உடனில்லை. இது தனிப்பட்ட பயணம் என கூறப்படுகிறது.
குடும்ப விழாவில் விஜய்?
இது அரசியல் பயணம் இல்லை என்பதால் நடிகர் விஜய் மட்டும் மும்பை சென்றுள்ளார்; அவர் அங்கு குடும்ப விழா ஒன்றில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது. இந்த குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்காக விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை சென்றார்.
VIDEO | TVK leader Vijay leaves his residence for Chennai airport to catch a flight to Mumbai.
— Press Trust of India (@PTI_News) March 20, 2026
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/WLdgKq47rB
தமிழக அரசியல் பரபரப்பு
தமிழக அரசியலில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளார்; அதாவது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது; மாநிலத்தைப் பொறுத்தவரை ஆட்சியை தக்க வைக்க திமுகவும் இழந்த ஆட்சியை மீட்க அதிமுகவும் போராடி வருகின்றன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது; இதில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் என பெரிதும் எதிர்பார்த்தது; ஆனால் கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் காங்கிரஸ் திமுக உடன் கூட்டணியை தொடர்ந்தது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன; இது மட்டும் இன்றி, ஒரு ராஜ்யசபா சீட்டு வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க; தமிழ்நாட்டில், 5 முனைப்போட்டி.. உருவானது புதிய கூட்டணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com