Assembly Election 2026: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று நேர்காணல் நடத்த உள்ளார்.
Assembly Election 2026: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று நேர்காணல் நடத்த உள்ளார்.

Published on: March 10, 2026 at 10:03 am
சென்னை, மார்ச் 10 2026:சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக போட்டியிட விரும்புபவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று நேர்காணல் நடத்த உள்ளார்.
4200 க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சி தலைமையகத்துக்கு வந்துள்ள நிலையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் என்று நேர்காணல் நடத்துகிறார். இன்று காலை 10:30 மணிக்கு நேர்காணல் தொடங்க உள்ளது. நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் நேர்காணல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன விஜயுடன் கட்சியின் பொதுச்செயலாளர் புசிய ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகளும் இணைந்து நேர்காணல் நடத்த உள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் இன்று டெல்லியில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கட்சிப் பணிகள் காரணமாக சிபிஐ அலுவலகம் வர இயலவில்லை என விளக்கம் அளித்து விஜய் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காத்திருந்து தாக்கிய கும்பல்.. இலங்கை முகாம் தலைவர் கொலை.. பெண்கள் உள்பட 6 பேர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com