விழிப்புடன் இருந்து வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்..விஜய்

Assembly Election 2026: புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Published on: April 9, 2026 at 3:19 pm

Updated on: April 9, 2026 at 4:56 pm

சென்னை, ஏப். 9 2026: அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று (9ஆம் தேதி) வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணிக்கும், காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கு இணையாக நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க. – நேயம் மக்கள் கழகம் கூட்டணியும் தேர்தல் களத்தில் இருப்பதால், புதுச்சேரியில் நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.

இந்த தேர்தலில் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்”. என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அப்பாவு vs பாலகிருஷ்ணன்.. ராதாபுரத்தில் கடும் போட்டி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com