துக்ளக் சோ மனைவி சௌந்தரா இன்று காலமானார். பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான மறைந்த சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மருத்துவர் ராமதாஸ் “துக்ளக் இதழின் நிறுவனரும், அரசியல் விமர்சகருமான நண்பர் மறைந்த சோ இராமசாமி அவர்களின் மனைவி சவுந்தரா இராமசாமி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் “புகழ்பெற்ற அரசியல் விமர்சகரும், எனது மரியாதைக்குரியவருமான மறைந்த சோ இராமசாமி அவர்களின் மனைவி சவுந்தரா இராமசாமி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். சசிகலா “பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான மறைந்த சோ ராமசாமி அவர்களின் மனைவி சௌந்தரா ராமசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.மறைந்த சோ ராமசாமி அவர்களும் அவரது மனைவி சௌந்தரா ராமசாமி அவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த அன்பையும், மதிப்பையும் கொண்டிருந்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது 60ஆம் ஆண்டு பிறந்தநாளின் போது மறைந்த சோ ராமசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களிடம் ஆசிபெற்றதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.அம்மையார் சௌந்தரா ராமசாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என சசிகலா தெரிவித்துள்ளார். செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)