TTV Dhinakaran: 10,11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran: 10,11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published on: May 16, 2025 at 11:59 am
சென்னை, மே 16 2025: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ, மாணவியர்கள் நடைபெற்று முடிந்த தேர்வு முடிவையே இறுதியாக கருதாமல் அடுத்தடுத்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று தங்களின் எதிர்கால இலக்குகளை அடைய வாழ்த்தி மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இதையும் படிங்க : குற்றவாளிகளை கண்டறிவதில் அலட்சியம்; தி.மு.க. அரசுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com