Assembly Election 2026 : 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், இந்திய கிறிஸ்துவ மதச்சார்பற்ற கட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவை அளித்துள்ளது.
Assembly Election 2026 : 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், இந்திய கிறிஸ்துவ மதச்சார்பற்ற கட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவை அளித்துள்ளது.

Published on: April 4, 2026 at 6:56 pm
சென்னை, ஏப்ரல் 4 2026 : இந்திய கிறிஸ்துவ மதச்சார்பற்ற கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் எம் எஸ்.மார்ட்டீன் விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது, “நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய கிறிஸ்துவ மதச்சார்பற்ற கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்று கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களின் நலனில் கவனம் செலுத்துவதில்லை. வாக்குகளை பெறுவதில் மட்டுமே குறியாக உள்ளார்.
கல்லறைத் தோட்டங்கள், தேவாலயங்கள் கட்டுவதிலும் மற்றும் சுவிசேஷ சபைகள் நடத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் கடந்த 5 ஆண்டு காலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்க பலமுறை நேரம் கேட்டும் இதுவரை ஒரு முறை கூட அழைத்துப் பேசி பிரச்சினைகளை தீர்க்கவில்லை.
இனிமேலும் அவரை நம்பி வாக்களித்தால் மேலும் ஏமாளிகளாக ஆகிவிடுவோம் என்பதால் நடைப்பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்திய கிறிஸ்துவ மதச்சார்பற்ற கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முழு ஆதரை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பி. பழனிசாமி அவர்களை ஆட்சி அரியணையில் அமர்த்த முழு வீச்சில் பாடுபடுவோம் என தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் பாஜக- காங்கிரஸ்.. எந்த தொகுதிகள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com