Tamil Nadu Kalaingar award | கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்” வழங்கப்பட உள்ளன.

February 17, 2025
Tamil Nadu Kalaingar award | கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்” வழங்கப்பட உள்ளன.
Published on: September 24, 2024 at 3:49 pm
Tamil Nadu Kalaingar award | கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்” வழங்கப்பட உள்ளன. இது குறித்து தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3-ஆம் நாளான்று வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் கடந்த 2022- ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்” வழங்கப்பட உள்ளன. இந்த விருதினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ‘மோகன் எந்த தவறும் செய்யவில்லை; அரைகுறை புரிதலுடன் கைது’: மருத்துவர் ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com