M K Stalin: கலைத்துறையில் உள்ள நபர்கள் பொறுப்புடன் படங்களை உருவாக்க வேண்டும்; போதைப் பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்காதீர்கள் என தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
M K Stalin: கலைத்துறையில் உள்ள நபர்கள் பொறுப்புடன் படங்களை உருவாக்க வேண்டும்; போதைப் பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்காதீர்கள் என தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: January 2, 2026 at 6:56 pm
சென்னை, ஜன 2, 2025: “சினிமாவில் போதைப் பொருட்களை ஊக்குவிக்காதீர்கள்” என தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ” கலைத்துறையில் உள்ள நபர்கள் சினிமா படங்களை பொறுப்புடன் உருவாக்க வேண்டும்; போதைப் பொருட்களை ஊக்குவிப்பது சீரழித்து விடும்” எனது தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும் என பெற்றோர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் எனவும் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து,” குழந்தைகள் தவறான பாதைக்கு செல்கிறார்களா என்பதை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ரயிலில் வட மாநில இளைஞர் மீது தாக்குதல்
சென்னை திருத்தணி புறநகர் ரயிலில் பயணித்த வட மாநில இளைஞர் ஒருவரை நான்கு இளஞ்சிறார்கள் கஞ்சா போதையில் கொடூரமாக தாக்கியுள்ளனர்; ரீல்ஸ் மற்றும் கஞ்சா போதையில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன; சமூக வலைதளங்களில் இது பெரும் கண்டனங்களையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; திராவிட மாடல் தமிழ்நாட்டின் பொற்காலம்.. சொல்கிறார் வைகோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com