Tiruppur: திருப்பூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tiruppur: திருப்பூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on: February 11, 2025 at 1:25 pm
திருப்பூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுந்தர வடிவேலு. இவர் அப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவுகள் அளிப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் அரசு பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கணித ஆசிரியர் சுந்தர வடிவேலு கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கூடங்களில் சமீப காலமாக பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து காணப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆசிரியர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக குடியரசு தினத்தன்று அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அதே பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் ஒருவர் தொடர்பு பட்டுள்ளதாகவும் அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை வலியுறுத்தி யார் அந்த சார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ரயிலில் கர்பிணிக்கு நேர்ந்த கொடூரம் ; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com