Nanguneri Chinnathurai: நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது; இந்த வழக்கில் என்ன நடந்தது?
Nanguneri Chinnathurai: நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது; இந்த வழக்கில் என்ன நடந்தது?
Published on: April 17, 2025 at 1:19 pm
திருநெல்வேலி ஏப்ரல் 17 2025: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்துறை சேர்ந்தவர் முனியாண்டி, அவரின் மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 19 வயது மகனும் சந்திரா செல்வி என்ற 16 வயது மகளும் உள்ளனர்.
சின்னத்துரை திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, அவரை சக மாணவர்கள் தாக்கினார்கள். இதற்கிடையில், 9- 8-2023 அன்று சின்னத்துரை வீட்டுக்குள் புகுந்து, சக மாணவர்களால் வெட்டப்பட்டார். தடுக்கச் சென்ற சின்னத்துரை தங்கைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தலைவர்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மாணவர் சின்னத்துரை திருநெல்வேலியில் நேற்று (ஏப்ரல் 16 2025) மீண்டும் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து திருநெல்வேலி காவல்துறை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அந்த செய்தி குறிப்பில், “
“மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சின்னதுரையிடம் விசாரித்த பொழுது, தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகிலுள்ள வசந்தம் நகர் விரிவாக்கப்பகுதிக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சின்னதுரையிடம் பணம் கேட்டதாகவும் அவரிடம் பணம் இல்லாததால் அவரை கட்டையால் அடித்து வலதுகையில் காயம் ஏற்படுத்தி அவரிடமிருந்த அலைப்பேசியை பறித்து சென்றதாகவும் தெரிவித்தார்.
மேற்படி சின்னதுரையிடம் காவல்துறையினர் விசாரணைக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் கேட்ட பொழுது தனக்கு மறந்து விட்டதாக கூறினார்.
மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கேட்ட பொழுது அதுவும் தனக்கு மறந்து விட்டதாக கூறுகிறார்.
சின்னதுரையின் கையில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு சிகிச்சை முடிந்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க தமிழக மீனவர்கள் மீது இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல்? பரபரப்பு தகவல்கள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com